நீங்கள் இரவில் குறட்டை விடுகிறீர்களா ?

பகலில் தூக்கமாக உணர்கிறீர்களா? நீங்கள் அதிக உடற்பருமனுடன் இருக்கிறீர்களா? உங்களுக்கு தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் இருக்கலாம். (OSA)

குறட்டை என்றால் என்ன?

குறட்டை என்பது தூக்கத்தின் போது பொதுவாக மேல் சுவாசப்பாதையில் ஒரு பகுதி தடையைத் தொடர்ந்து தொண்டையில் சீரற்ற காற்றோட்டத்தின் விளைவாக உருவாகும் சத்தமhகும்.

Obstructive-sleep-apnea-snoring1
குறட்டை எப்படி ஏற்படுகிறது?
 • நமது தொண்டைஇ நமது உடலின் பெரும்பாலான பகுதிகளைப் போலவேஇ நமது மேல் சுவாசப்பாதையைத் திறந்து வைத்திருக்கவும்இ பேச்சு மற்றும் விழுங்குதல் போன்ற செயல்பாடுகளில் உதவவும் உள்ள தசைகளின் குழுக்களால் கட்டுப்படுத்தப் படுகின்றது.
 • சிலருக்குஇ தூக்கத்தின் போது தொண்டையில் உள்ள தசைகள் அதிகமாக தளர்வடைகின்றனஇ இதனால் மேல் சுவாசப்பாதை தானாகவே சரிந்து காற்றின் சுதந்திர ஓட்டத்தைத் தடுக்கிறதுஇ இதனால் சீரற்ற காற்றோட்டம் ஏற்படுகிறது. இந்த சீரற காற்றோட்டம் ஒரு சத்தத்தை உருவாக்குகிறதுஇ இது பொதுவாக “குறட்டை” என்று குறிப்பிடப்படுகிறது.
 • வேறு என்ன குறட்டையை ஏற்படுத்தும்? ஆழ்ந்த உறக்கத்தின் போது தொண்டை மற்றும் நாக்கில் தசை தொனி (tone) குறைதல்இ மது அருந்துதல் மற்றும் சாதாரண முதுமை பலவீனமான தசைகளுக்கு வழிவகுக்கும்
 • விலகலடைந்த மூக்குச்சுவர் (ஒவ்வொரு நாசிக்கும் இடையே உள்ள குருத்தெலும்புகளின் கட்டமைப்பு சுவர்) போன்ற மூக்கில் உள்ள குறைபாடுகள்.
 • நீண்ட மென் அண்ணம் மற்றும்/அல்லது Uvula (வாய் குழியின் பின்புறத்தில் உள்ள திசுக்களின் தொங்குகின்ற பந்து போன்ற அமைப).
Labelled-anatomy
குறட்டை எப்பொழுதும் அடிப்படைக் கோளாறைக் குறிக்கிறதா?
 • இல்லை! நாம் அனைவரும் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் குறட்டை விடலாம்இ இது கிட்டத்தட்ட ஒரு உலகளாவிய நிகழ்வு.
 • குறட்டையானது பகல்நேர தூக்கம் அல்லது தூக்கமின்மை போன்ற எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாவிட்டால் அது நோயக கருதப்பட மாட்டாது.

தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) என்றால் என்ன?

 • தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) பெயர் குறிப்பிடுவது போலஇ நுரையீரலுக்குள் காற்றைக் கொண்டு செல்லும் மேல் சுவாசப்பாதையின் தற்காலிக மூடல் காரணமாகஇ தூக்கத்தின் போதுஇ மேல் சுவாசப் பாதையில் காற்று (அல்லது சுவாசம்) சுதந்திர ஓட்டத்திற்கு ஏற்படும் திடீர்இ நிலையற்ற குறுக்கீடு.
 • தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) என்பது உலகளவில் பொதுவான தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறு ஆகும்.
 • தூக்கம் தொடர்பான சுவாசக் கோளாறுகள், தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) மைய்யமான தூக்க மூச்சுத்திணறல் (Central Sleep Apnoea)மற்றும் கலப்பு தூக்க மூச்சுத்திணறல் (Mixed Sleep Apnoea) என பரந்த அளவில் வகைப்படுத்தப்படுகின்றன.
தூக்க அடைப்பு மூச்சுத்திணறலில் என்ன நடக்கிறது?
 • நுரையீரலுக்கு காற்றைக் கொண்டு செல்லும் காற்றுப்பாதை உங்கள் தொண்டை வழியாக செல்கிறது. நமது தொண்டைஇ உடலின் பெரும்பாலான பகுதிகளைப் போலவேஇ நமது மேல் சுவாசப்பாதையைத் திறந்து வைக்க உதவுகிறது மற்றும் பேச்சு மற்றும் விழுங்குதல் போன்ற செயல்பாடுகளில் உதவுகிறது.
 • சிலருக்குஇ தூக்கத்தின் போது தொண்டையில் உள்ள தசைகள் அதிகமாக தளர்வடைகின்றனஇ இதனால் மேல் சுவாசப்பாதை தானாகவே சரிந்து காற்றின் சுதந்திர ஓட்டத்தைத் தடுக்கிறதுஇ இதனால் சீரற்ற காற்றோட்டம் ஏற்படுகிறது. இந்த சீரற்ற காற்றோட்டம் ஒரு சத்தத்தை உருவாக்குகிறதுஇ இது பொதுவாக “குறட்டை” என்று குறிப்பிடப்படுகிறது.
 • தொண்டையில் அல்லது மேல் சுவாசப் பாதையில் 10 வினாடிகள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் காற்று ஓட்டத்தின் முழுமையான தடை ஏற்படுவது மூச்சுத்திணறல் (Apnoea)எனப்படும்.
  • 10 வினாடிகளுக்கு மேல் நீடிக்கும் பகுதியளவு தடை (50% அல்லது அதற்கு மேற்பட்ட காற்று ஓட்டம் குறைதல்) உடன் இரத்ததில் ஆக்சிசன் அளவு குறைதல் ஹைப்போப்னியா (Hypopnoea) எனப்படும்.
 • இந்த மூச்சுத்திணறல் தாக்குதல்களின் போதுஇ இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை பராமரிக்க போதுமான அளவு காற்று நுரையீரலை சென்றடையாது. குறைந்த இரத்த ஆக்ஸிஜன் அளவு மூளையால் கண்டறியப்பட்டுஇ உடனடியாக ஆழ்ந்த உறக்க நிலையிலிருந்து லேசான உறக்கத்திற்குக் கொண்டுவருகிறதுஇ அல்லது நபரை முழுமையாக எழுப்புகிறதுஇ அதன் பிறகு நபர் மீண்டும் சுவாசிக்கத் தொடங்குகிறார். இந்த மூச்சுத்திணறல் தாக்குதல்கள் தூக்கம் முழுவதும் மீண்டும் மீண்டும் நிகழும்
 • இது தூக்கத்தின் தரத்தை குறைக்கிறது மற்றும் இறுதியில் போதுமான தூக்கமின்மையுடன் தொடர்புடைய சிக்கல்களுக்கு வழிவகுக்கிறது.
 • தூக்கத்தின் போது தொண்டை அடைக்கப்படும் அடைப்பு மூச்சுத்திணறல் எபிசோட் கழுத்தை நெரிப்பதற்கு ஒப்பிடத்தக்கது!
  • யாராவது உங்களை கழுத்தை நெரித்தால்இ என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்?
  • நீங்கள் பீதி அடைவீர்கள்இ உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும்இ இரத்த அழுத்தம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பீர்கள். ழுளுயு இல் மூச்சுத்திணறல் தாக்குதலின் போது இதே போன்ற நிலைமை எழுகிறது. இது உடலுக்கு ஒரு மன அழுத்த சூழ்நிலையாகும்இ இது கார்டிசோல்இ அட்ரினலின் மற்றும் நோர்பைன்ப்ரைன் (Cortisol, Adrenaline, Norepinephrine)போன்ற உள்ளார்ந்த அழுத்த ஹார்மோன்களை வெளியிடுகிறதுஇ இது நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை மோசமாக பாதிக்கிறதுஇ இது காலப்போக்கில் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழிவகுக்கிறது.
தூக்க அடைப்பு மூச்சுத்திணறலின் (OSA) சிக்கல்கள் என்ன?
 • OSA தீடீர் மரணம் உட்பட பல நாள்பட்ட சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.
  • உயர் இரத்த அழுத்தம் – OSA உடைய பெரும்பாலான நோயாளிகளுக்கு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த இரண்டுக்கும் மேற்பட்ட இரத்த அழுத்த மருந்துகள் தேவைப்படுகின்றன.
  • நீரிழிவு நோய்.
  • குருதி ஓட்டத்தடை இதய நோய்.
  • பக்கவாதம்.
  • அரித்மியாஸ் (அசாதாரண இதயத் துடிப்பு).
  • இரத்தச் சிவப்பணு மிகை (Polycythemia)
  • பாலியல் செயலிழப்பு.
 • பகலில் போதிய தூக்கமின்மைஃஅதிக தூக்கத்துடன் தொடர்புடைய சிக்கல்கள்
  • சாலை விபத்துக்கள் – வாகனமோட்டும் போது தூங்குவதால்!
  • நினைவாற்றல் குறைபாடுஃ மறதி.
  • ஆளுமையில் மாற்றம். எரிச்சலாகவும் கோபமாகவும் உணர்தல்
  • மனச்சோர்வு போன்ற மனநோய்களின் ஆபத்து அதிகரிக்கும்.
  • ஆரோக்கியமான வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் செயல்பாட்டில் குறுக்கீடு.
  • ஆண்மைக்குறைவுஇ பாலியல் ஆசை குறைதல்இ மலட்டுத்தன்மை போன்ற பாலியல் செயலிழப்புகளின் ஆபத்து அதிகரிக்கிறது.
  • சமூக செயல்பாட்டை சீர்குலைக்கிறது – பகல்நேர தூக்கம்இ சோம்பல்இ வேலையில் சோர்வாக உணர்தல்.
  • போதிய தூக்கமின்மை உங்கள் ஆயுளைக் குறைக்கும்!
தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) ஏற்படும் அபாயம் உள்ளவர்கள் யார்?
 • அதிக எடை அல்லது பருமனாக உள்ளவர்கள்இ குறிப்பாக ஆணுக்கு கழுத்து சுற்றளவுஃகாலர் அளவு 42 செ.மீ.க்கும் அதிகமாகவும்இ பெண்ணுக்கு 40 செ.மீ.க்கு அதிகமாகவும் இருந்தால்.
  • ஒருவர் எடை அதிகரிக்கும் போதுஇ கழுத்து மற்றும் தொண்டையைச் சுற்றி நிறைய கொழுப்பு படிந்துஇ மேல் சுவாசப்பாதையை குறுகலாக்கிஇ தொண்டையில் காற்றோட்டம் தடைபடுவதற்கு வழிவகுக்கிறது.
  • 60% மிதமான மற்றும் கடுமையான OSA இற்கு, உடல் பருமன் காரணமாக உள்ளது.
 • குறட்டை விடுபவர்கள்.
 • பரம்பரை – OSA நோயாளிகளின் முதல்-நிலை உறவினர்களுக்கு ழுளுயு இருமடங்காக இருக்கும்.
 • சில நோய் நிலைமைகள் OSA இன் அபாயத்தை அதிகரிக்கின்றன அல்லது OSA உடன் தொடர்புடையவை. உங்களுக்கு கீழே உள்ள நோய்களில் ஏதேனும் இருந்தால்இ நீங்கள் OSA க்காக சோதிக்கப்பட வேண்டும்.
  • இருதய சம்பந்தமான,
  • உயர் இரத்த அழுத்தம்.
  • மாரடைப்பு.
  • இதய செயலிழப்பு.
  • கார்டியாக் ரிதம் கோளாறுகள்.
  • நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் – நுரையீரலில் உயர் இரத்த அழுத்தம்
 • வளர்சிதைமாற்றம் சம்பந்தமான
  • நீரிழிவு நோய்.
  • டிஸ்லிபிடெமியாஸ்.
  • தைராய்டு கோளாறுகள்.
  • சிறுநீரக நோய்,
  • நாள்பட்ட சிறுநீரக நோய்.
 • அமைதியற்ற கால்கள் நோய்க்குறி (Restless leg syndrome)
 • நுரையீரல் நோய்
  • நாட்பட்ட காற்றுப்பாதை அடைப்பு நோய் (COPD).
  • உடல் பருமன் ஹைபோவென்டிலேஷன் சிண்ட்ரோம் (OHS)
 • நரம்பியல் கோளாறுகள் ஸ்ரீ பார்கின்சன் நோய், மோட்டார் நியூரான் நோய்.
 • கைபோஸ்கோலியோசிஸ் (அசாதாரணமாக வளைந்த முதுகெலும்பு) மற்றும் மார்பின் எலும்புகள் மற்றும் தசைகள் சம்பந்தப்பட்ட பிற நோய்கள்.
 • மது அருந்துதல் OSA அபாயத்தை அதிகரிக்கிறது, ஏனெனில் அது மேல் சுவாசப்பாதை தசைகளை தளர்த்துகிறது, இதனால் குறட்டை மோசமாகிறது.
தூக்க அடைப்பு மூச்சுத்திணறலை (OSA) நீங்கள் எப்போது சந்தேகிக்க வேண்டும்?
 • இவற்றில் ஏதேனும் ஒன்று உங்களிடம் இருந்தால், உங்களுக்கு OSA இருக்கலாம்.
  • தூக்கத்தின் போது குறட்டை, மூச்சடைப்பு, மூச்சுத்திணறல்.
  • இரவில் மூச்சுத்திணறல் நிகழ்வுகளைக் வாழ்க்கைத்துணை கவனித்தல்.
  • பகல்நேர தூக்கம், வாகனம் ஓட்டும்போது தூங்குவது – வழக்கத்திற்கு மாறாக உங்களுக்கு தூக்கம் வருகிறதா என்பதை அறிய 60 வினாடிகள் ஆன்லைன் சோதனையை மேற்கொள்ளுங்கள்.
  • நாள் முழுவதும் எரிச்சல், மனநிலை மாற்றங்கள், கவனம் செலுத்த இயலாமை.
  • பருமன் அல்லது அதிக எடை.
  • சரியாக கட்டுப்படாத இரத்த அழுத்தம், இளம் வயதில் உயர் இரத்த அழுத்தம்
  • சரியாக கட்டுப்படாத நீரிழிவு.
  • புதிதாக கண்டறியப்பட்ட பக்கவாதம் அல்லது மாரடைப்பு.
தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) எவ்வாறு கண்டறியப்படுகிறது?
 • மேலே குறிப்பிட்டுள்ள ஏதேனும் அறிகுறிகள் உங்களிடம் இருப்பதாக நீங்கள் நினைத்தால் அல்லது மேற்கூறிய 60 வினாடி சோதனையை முடித்து, சோதனையின் முடிவு OSA க்கு மிதமானதாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால், உங்கள் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும், அவர் உங்களை தூக்க நிபுணரிடம் பரிந்துரைப்பார். அல்லது எங்கள் ஆன்லைன் தொடர்பு மூலம் எங்களைத் தொடர்புகொள்ளவும் அல்லது எங்கள் ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளவும்
 • ஒரு மருத்துவரின் முழுமையான கேள்விகள்; உடல் பரிசோதனைக்குப் பிறகு, OSA மருத்துவ ரீதியாக சந்தேகிக்கப்படலாம் அதனைத் தொடர்ந்து ஒரே இரவு தூக்கம் ஆய்வு போன்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்படலாம்.
  • தூக்க ஆய்வுகள் என்றால் என்ன?
தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) எவ்வாறு சிகிச்சையளிக்கப்படுகிறது?
 • தொண்டையைத் திறந்து வைத்து தூக்கத்தின் போது காற்றுப்பாதை சரிவதைத் தடுப்பதே முக்கிய சிகிச்சை முறையாகும்.
 • இலங்கையில் கிடைக்கும் 2 மிகவும் பிரபலமான சிகிச்சை முறைகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
  • தொடர்ச்சியான பாசிட்டிவ் ஏர்வே பிரஷர் வென்டிலேஷன் (CPAP)
 • CPAP – இது முகமூடியுடன் கூடிய சிறிய இயந்திரம். ஒருவர் தூங்கச் செல்லும் போது முகமூடியை அணிவார். இயந்திரம் ஒரு ஜெட் காற்றை உருவாக்குகிறது, இது காற்றுப்பாதையை மூட விடாமல் திறந்துவிடும். குறட்டை உடனடியாக நின்று விடுவதுடன் காலையில் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பார்
  • குறுகிய சுவாசப்பாதையை அறுவை சிகிச்சை மூலம் சரிசெய்தல்.
 • அறுவைசிகிச்சை சிகிச்சையானது சுவாசப்பாதையை பெரிதாக்குவதையும்இ அதன் மூலம் சுவாசப்பாதை தானாகவே சரிவதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 • குறிப்பிடத்தக்க சில நோயாளிகளில் மட்டும் இது கருத்திற்கொள்ளப்படலாம். உடற்கூறியல் முக அசாதாரணங்கள், மேல் மூச்சுக்குழாய் அடைப்புக்கு பங்களிக்கும் பெரிய டான்சில்கள் உள்ளவர்கள் அறுவை சிகிச்சை மூலம் பயனடைவார்கள்.
 • CPAP சிகிச்சையின் பின்னும் திருப்திகரமான முன்னேற்றத்தை காட்டாத நோயளிகளுக்கும் அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
 • பல வகையான அறுவை சிகிச்சைகள் உள்ளன.
  • மற்ற சிகிச்சை முறைகள்
  • உணவுப்பழக்கம் மற்றும் உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு மிகவும் முக்கியமானது.
 • அதிக எடை கொண்ட அனைத்து நோயாளிகளும் உணவு மற்றும் உடற்பயிற்சி மூலம் எடை குறைப்பு செய்ய வேண்டும்! மேலும் படிக்கவும்
 • வாய்வழி உபகரணங்கள் = கீழ்த்தாடையை முன்னகர்த்தும் சாதனங்கள் (Mandibular Advancement Devices)
 • வாய்வழி உபகரணங்கள் வாய் பாதுகாப்பு சாதனங்கள் போன்று தோற்றமளிக்கின்றன இவை பல் மருத்துவர்களால் வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகின்றன.
 • இந்த சாதனங்கள் கீழ் தாடையை முன்னோக்கி மற்றும் மேல்நோக்கி நகர்த்துகின்றன, பின்னர் அது நாக்கை முன்னோக்கி நகர்த்துகிறது மற்றும் மேல் சுவாசப்பாதையின் அளவை அதிகரிக்கிறது, அதைத் திறந்து வைக்கிறது.
 • இந்த சாதனங்கள் முக்கியமாக குறட்டை மற்றும் லேசானது முதல் மிதமான OSA உள்ளவர்களpல் ஊPயுP இனால் பெரிய அளவு முன்னேற்றம் இல்லாவிடின் பயன்படுத்தப்படுகின்றது
உதவியை எங்கே பெறுவது?
 • சுவாச மருத்துவரைக் கொண்ட பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் OSA உள்ளவர்களைத் நோய்பாதிப்பு ஆய்விட்டுக் கண்டறியும் வசதிகள் உள்ளன. வசதி இல்லை என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவீர்கள்.
 • தற்போது பின்வரும் மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் தூக்க சேவைகள் கிடைக்கின்றன.
 • மேலும் தகவலுக்கு எங்கள் உதவு பக்கத்தைப் பார்வையிடவும்.

சென்ட்ரல் ஸ்லீப் அப்னியா என்றால் என்ன?

 • சென்ட்ரல் ஸ்லீப் அப்னியாவில், OSA போலல்லாமல், சுவாசப்பாதை தடுக்கப்படவில்லை. ஆனால் சுவாசக் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள உறுதியற்ற தன்மை காரணமாக தசைகள் சுவாசிக்க மூளை கட்டளையிடத் தவறுகின்றது..
 • மூளை மற்றும் நரம்பு மண்டலத்தில் கோளாறு உள்ளவர்களுக்கு இது நிகழலாம்.
 • பக்கவாதம் மற்றும் உயர்நிலை இதய செயலிழப்பைத் தொடர்ந்து வரும் நோயாளிகளுக்கும் இது ஏற்படலாம்.

உடல் பருமன் ஹைபோவென்டிலேஷன் சிண்ட்ரோம் (OHS)

 • OHS என்பது மிகவும் பருமனான நோயாளி போதுமான அளவு சுவாசிக்கத் தவறிய நிலையாகும். இதன் விளைவாக அவர்களின் இரத்த ஓட்டத்தில் போதுமான ஆக்ஸிஜனைப் பெற இயலாமை மற்றும் கார்பன் டை ஆக்சைடை வெளியேற்ற முடியாது.
 • இதன் விளைவாக இரத்தத்தில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் மற்றும் இரத்தத்தில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு (CO2) ஏற்படுகிறது.
 • OHS ஆனது உடல் பருமன் மற்றும் பகல்நேர உயர் CO2 அளவு (ஹைபர்கேப்னியா) ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
 • OHS பொதுவாக தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) உடன் தொடர்புடையது.
 • OHS உடைய நோயாளிகள் பொதுவாக பகல்நேர தூக்கம் அதிகமாக இருப்பதாக முறையிடுவர்
 • அவர்கள் காலை தலைவலியையும் அனுபவிக்கலாம்.
 • மற்ற அம்சங்களானவை மனநிலை மாற்றங்கள், சோர்வு, பலவீனமான மனவொன்றிப்பு மற்றும் மோசமான நினைவாற்றல்.

வேடிக்கையான உண்மை = உடல் பருமன் ஹைப்போவென்டிலேஷன் சிண்ட்ரோம் (OHS), தூக்கத்தில் மூச்சுத்திணறல் தொடர்பான ஒரு நிலை, முதலில் பிக்விக்கியன் நோய்க்குறி (Pickwickian Syndrome) என்று அழைக்கப்பட்டது. இது சார்லஸ் டிக்கன்ஸ் எழுதிய தி பிக்விக் பேப்பர்ஸ் என்ற நாவலை தொடர்ந்து பெயரிடப்பட்டது. ஏனெனில் இந்த நாவலில் இடம்பெற்றுள்ள “ஜோய் தி ஃபேட் பாய்” என்ற பாத்திரத்திடம் இந்த நோய்க்கான எல்லா முதன்மையான அறிகுறிகளும் உள்ளன.

பிக்விக் மற்றும் தூக்க மூச்சுத்திணறல் ஃ சார்லஸ் டிக்கன்ஸ் தகவல்.

நேர்மறை காற்றுப்பாதை அழுத்த சாதனங்கள் - "PAP" சாதனங்கள்

இந்தச் சாதனங்கள் தடையற்ற தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு எவ்வாறு உதவுகின்றன?
 • OSA என்றால் என்ன?
  • தூக்க அடைப்பு மூச்சுத்திணறல் (OSA) என்பது பெயர் குறிப்பிடுவது போலஇ உறக்கத்தின் போது மேல் காற்றுப்பாதையில் காற்றின் சுதந்திர ஓட்டத்திற்கு (அல்லது சுவாசம்) திடீர், நிலையற்ற குறுக்கீடு. இது காற்றை எடுத்துச் செல்லும் மேல் சுவாசப்பாதையின் தற்காலிக மூடல் காரணமாக ஏற்படுகிறது
  • OSA பற்றி மேலும் அறிக
 • PAP சாதனங்கள் மேல் சுவாசப்பாதைக்குள் ஒரு நேர்மறையான அழுத்தத்தை அளித்து பராமரிக்கிறது. இதனால் தூக்கத்தின் போது அது மடிந்து விழுவதையும் தடைபடுவதையும் தடுக்கிறது. காற்றின் ஜெட் காற்றுப்பாதையைத் திறக்கிறது. இது தடையற்ற திறந்த மேல் சுவாசப்பாதையை ஏற்படுத்துகிறதுஇ இதனால் காற்று நுரையீரலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.
 • அடைப்பை நீக்கினால் குறட்டை நீங்கும்.
 • நுரையீரலுக்கு காற்றோட்டத்தை மீட்டெடுப்பது மூளைக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உறக்கம் கலைவதை தடுக்கும்.
 • தூக்க முறைகள் இயல்பாக்கப்படும் மற்றும் இயல்பான மறுசீரமைப்பு தூக்கம் அடையப்படும்.
 • பகல்நேர தூக்கம் மற்றும் போதிய தூக்கமின்மையால் ஏற்படும் பிற பாதகமான விளைவுகள் மறைந்துவிடும்.
PAP சாதனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் என்ன பலன்களைப் பெறுவீர்கள்?
 • மறுநாள் காலையில் நீங்கள் புத்துணர்ச்சியுடன் எழுந்திருப்பீர்கள்!
 • பகல் நேர உற்சாகம் அதிகரிக்கும். உடல் செயல்பாடுகளுக்கு அதிக ஆற்றலும் ஊக்கமும் கிடைக்கும்.
 • காலப்போக்கில் போதுமான தூக்க அளவு கிடைத்து, இரவு நேர விழிப்பும் குறைவதால், உங்கள் மன அழுத்த ஹார்மோன் அளவுகள் குறைந்து, உங்களுக்கு நீரிழிவு அல்லது உயர் குருதி அழுத்தம் இருந்தால், சிறந்த கட்டுப்பாட்டை பெறலாம்.
 • உங்கள் மனநிலை மேம்படும், எரிச்சல் மற்றும் சோர்வு குறையும்
 • வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பது தூக்கம் தொடர்பான மோட்டார் வாகன விபத்துகளின் அபாயத்தை நீக்கும்
 • நேர்மறை காற்றுப்பாதை அழுத்த சாதனங்களில் இரண்டு முக்கிய வகைகள் உள்ளன
     1. CPAP
     2. BiPAP

தொடர்ச்சியான நேர்மறை காற்றுப்பாதை அழுத்த சாதனங்கள் (CPAP)

Man-on-cpap-machine
CPAP எவ்வாறு வேலை செய்கிறது?
 • CPAP சாதனங்கள் மேல் காற்றுப்பாதையில் நிலையான அழுத்தத்தை வழங்கும் இயந்திரங்கள் சாதனத்துடன் இணைக்கப்பட்ட குழாய் மற்றும் முகம் அல்லது மூக்கில் பயன்படுத்தப்படும் ஒரு முகமூடி வழியாக விநியோகிக்கப்படுகிறது. இந்த அழுத்தம் தூக்கத்தின் போது மேல் சுவாசப்பாதை சரிவதைத் தடுக்கிறது மற்றும் நமது நுரையீரலுக்குள் காற்றோட்டத்தை பராமரிக்கிறது
இரண்டு வகையான CPAP சாதனங்கள்
 • நிலையான அழுத்த சாதனங்கள்.
  • மேல் சுவாசப்பாதையைத் திறந்து வைக்கத் தேவையான அழுத்தம் நபருக்கு நபர் மாறுபடும் மற்றும் மேல் சுவாசப்பாதை அடைப்பின் அளவும் மாறுபடும்இ எனவே உங்களுக்குத் தேவையான அழுத்தம் உங்கள் தூக்க நிபுணரால் தீர்மானிக்கப்படும். இந்த சாதனங்கள் 5-20 cm H2O வரை அழுத்தம் கொடுக்க முடியும்.
 • தானியங்கு அழுத்த சாதனங்கள் (Auto CPAP)
  • இந்த சாதனங்கள் நிலையான அழுத்த சாதனங்களைப் போலவே இருக்கும், ஆனால் ஒரு தனிநபரின் மேல் காற்றுப்பாதையைத் திறந்து வைத்திருக்கத் தேவையான அழுத்தத்தை தானாகவே கண்டறிந்து தீர்மானிக்கும்.
  • ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு இடையே அழுத்தங்கள் தீர்மானிக்கப்படும் போது, சாதனம் தானாகவே மேல் காற்றுப்பாதை அடைப்பின் அளவைக் கண்டறிந்து அதற்கேற்ப அழுத்தங்களைப் பயன்படுத்துகிறது. இதனால் மேல் காற்றுப்பாதை சரிவதைத் தடுக்கிறது.
CPAP இன் பலன்களை நான் உணர எவ்வளவு காலம் ஆகும்?
 • பொதுவாக 1-2 வாரங்கள். சாதனம் ஒரு இரவில் குறைந்தது 4 மணிநேரம் மற்றும் வாரத்தில் குறைந்தது 5 இரவுகள் பயன்படுத்தப்பட வேண்டும்.
 • நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வரை CPAP மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நான் CPAP ஐ ஆரம்பித்தவுடன், அடுத்து நான் என்ன செய்ய வேண்டும்?
 • நீங்கள் CPAP இல் 2 வாரங்களுக்குப் பிறகு கணினியில் உள்ள தரவு அட்டையிலிருந்து தரவைப் பதிவிறக்குமாறு இயந்திர வழங்குநரிடம் கேட்க வேண்டும். இந்தத் தரவைக் கொண்டு உங்களுக்கு CPAP பரிந்துரைத்த உங்களின் தூக்க நிபுணர்ஃசுவாச மருத்துவரை நீங்கள் சந்திக்க வேண்டும். அவர் அல்லது அவள் தரவைப் பார்த்து உங்களுக்கு ஆலோசனை கூறுவார்கள்.
நான் எப்போதாவது CPAP ஐப் பயன்படுத்துவதை நிறுத்த முடியுமா? அல்லது இது வாழ்நாள் முழுவதும் தேவைப்படுமா ?
 • OSA என்பது நீரிழிவு நோய் போன்ற, அறியப்பட்ட சிகிச்சை இல்லாத நீண்ட கால நிலையாகும். நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தும் வரை CPAP மிகவும் பயனுள்ள சிகிச்சையாகும்.
 • நீங்கள் CPAP இல் மிகவும் மகிழ்ச்சியடையவில்லை என்றால், OSA சிகிச்சைக்கு வேறு வழிகள் உள்ளன. இந்த விருப்பங்களைப் பற்றி விவாதிக்க உங்கள் தூக்க நிபுணர் ஃ சுவாச மருத்துவரை அணுகவும்.
நான் உடல் எடையை குறைத்தால் CPAP சாதனத்தைப் பயன்படுத்துவதை நிறுத்தலாமா?
 • எடை இழப்பு தூக்கத்தில் மூச்சுத்திணறலின் தீவிரத்தை குறைக்கலாம் ஆனால் அதை குணப்படுத்தாது. இருப்பினும் 10% க்கும் அதிகமான எடை இழப்பு CPAP அழுத்த அளவுகைளை குறைக்கலாம்.
 • பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை குறிப்பிடத்தக்க எடை இழப்புக்கு உதவும், இதனால் நீங்கள் CPAP ஐ நிறுத்த வாய்ப்புள்ளது.
CPAP க்கு நான் எவ்வாறு தயாராவது?
 • PAP சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன், காது மூக்கு மற்றும் தொண்டை (ENT) அறுவை சிகிச்சை நிபுணரால் மேல் சுவாசப் பாதையில் ஏற்படும் குறைபாடுகள் குறித்து நீங்கள் மதிப்பீடு செய்யப்படுவீர்கள்.
 • நீங்கள் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கத்தில் மூச்சுத்திணறலுக்கு வழிவகுக்கும் பிற மருத்துவப் பிரச்சனைகள் உள்ளதா எனப் பரிசோதிக்கப்படுவீர்கள்.
 • நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், எடை குறைப்பு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களுக்கு உதவும் ஊட்டச்சத்து நிபுணர் உங்களுக்கு அறிவுரை அளிப்பார்.
 • நீங்கள் கூடிய உடல் பருமனுடன் இருந்தால், எடை இழப்பை ஊக்குவிக்கும் பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை (வயிற்றின் அளவைக் குறைக்க செய்யப்படும் அறுவை சிகிச்சை) அளிப்பது பற்றி உங்களை மதிப்பிட்டு உங்களுடன் ஆலோசனை செய்யப்படும்.
எனது CPAP அழுத்தம் சரிசெய்யப்பட வேண்டுமா என்பதை நான் எப்படி அறிவேன்?
 • குறட்டை, அதிக பகல்நேர தூக்கம் போன்ற OSA அறிகுறிகள் உங்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்டால்.
 • நீங்கள் எடை கூடினால்.
 • உங்களுக்காக ஊPயுP ஐ பரிந்துரைத்த உங்கள் சுவாச மருத்துவரால் நீங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.
CPAP இல் இருக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் என்ன?
 • முகமூடியிலிருந்து தோல் எரிச்சல், புண்கள் மற்றும் காயங்கள்.
 • நீங்கள் முகமூடியை மிகவும் இறுக்கமாகப் பயன்படுத்துவது இதற்கு காரணமாக இருக்கலாம். முகமூடிக்கும் முக தோலுக்கும் இடையில் இரண்டு விரல்களில் நழுவுவதற்கு போதுமான இடைவெளி இருக்க வேண்டும்.
 • உங்கள் முகமூடி குஷன் மாற்றப்பட வேண்டி இருக்கலாம்
 • மாஸ்க் லைனர்கள் தோல் எரிச்சல் மற்றும் கசிவை தீர்க்க உதவும்.
 • நீங்கள் மூக்கில் பாவிக்கும் (Nasal Pillows) முயற்சி செய்யலாம்.
முகமூடி பொருத்தம் சரிசெய்தல் குறிப்புகள்

முகமூடி கசிவு மிகவும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாகும். சரியான பொருத்தத்தை உறுதிப்படுத்த பின்வரும் வழிகாட்டியைப் பயன்படுத்தவும்.

 • ஓய்வெடுக்கும் போது படுக்கையில் அமர்ந்து முகமூடியை தளர்வாக வைத்து முகத்தில் வைக்கவும்.
 • CPAP சாதனத்தை இயக்கவும்.
 • உங்கள் சாதாரண உறங்கும் நிலையில் தலையணையில் படுத்துக் கொள்ளுங்கள்.
 • சுரியான இறுக்கம் கிடைக்கும் வரை முகமூடி பட்டைகளை மெதுவாக இறுக்குங்கள், அதிகமாக இறுக்க வேண்டாம் (முகமூடி பட்டைக்கும் முக தோலுக்கும் இடையில் நீங்கள் இரண்டு விரல்களை நுழைக்க கூடியதாக இருக்க வேண்டும்).
 • பட்டைகள் சரிசெய்யப்பட்ட பிறகு முகமூடியை உங்கள் முகத்திலிருந்து (சுமார் 2 அங்குலங்கள்) விலக்கி மெதுவாக மீண்டும் முகத்தில் பதிய அனுமதிக்கவும். இது இரட்டைமுகமூடி குஷனை உயர்த்தி, சிறந்த இறுக்கத்தைஉறுதிசெய்ய அனுமதிக்கும்.ஷ
 • முகமூடி பொருத்தம் தூங்கும் நிலையைப் பொறுத்து மாறுபடும். நீங்கள் உங்கள் முதுகுப்பக்கமாக திரும்பினால் மீண்டும் சரிசெய்ய வேண்டியிருக்கும்.
 • ஒரு பக்கத்தில் தூங்குவதற்கு பயிற்சியளிப்பதன் மூலம் இதைத் தவிர்க்கலாம்.

இரு-நிலை நேர்மறை காற்றுப்பாதை அழுத்த சாதனங்கள் (BiPAP)

BiPAP சாதனங்கள் இரண்டு நிலை அழுத்தத்தை உருவாக்குகின்றன. சுவாசிக்கும்போது அதிக அளவு அழுத்தம் (உட்சுவாசம்) மற்றும் சுவாசத்தை வெளியேற்றும் போது குறைந்த அளவு அழுத்தம் (வெளிச்சுவாசம்). உட்சுவாசத்தின் போது செலுத்தப்படும் அழுத்தம் IPAP என்றும், மூச்சை வெளியேற்றும் போது ஏற்படும் அழுத்தம் EPAP என்றும் அழைக்கப்படுகிறது.

BiPAP சாதனங்கள் கீழ்வரும் நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்

 • உயர் PAP அழுத்த தேவை (20cm H2o க்கும் அதிகம்).
 • CPAP சாதனங்களுக்கு எதிராக மூச்சை வெளியேற்றுவது கடினமாக உள்ளபோது.
 • சுவாச முயற்சி குறைவால் சுவாசிக்காதவர்கள்.
 • உடல் பருமன் ஹைபோவென்டிலேஷன் சிண்ட்ரோம் (OHS).
error: Content is protected !!