Narcolepsy-ta ashansiam பங்குனி 17, 2022

நார்கோலெப்ஸி என்றால் என்ன?

  • நார்கோலெப்ஸிஎன்பது தூக்கம் தொடர்பான நரம்பியல் கோளாறு ஆகும்இ இதனால் அதிக பகல் தூக்கம் ஏற்படுகிறது.

  • இந்த நிலையில் உள்ள நோயாளிகள் பகல் நேரத்தில் எளிதில் குறுகிய தூக்க நிகழ்வுகளுக்கு ஆளாவார்கள்.

  • இந்த தூக்க நிகழ்வுகள் புத்துணர்ச்சி அளிப்பதில்லை.

  • இந்த நோயாளிகள் சுயநினைவை இழக்காமலேயே திடீர் கீழே விழும் (drop attacks) நிகழ்வுகளை வெளிப்படுத்தலாம். இந்த நிகழ்வுகள் உணர்ச்சி தூண்டுதல்களால் தூண்டப்படலாம் (எ.கா. சிரிப்பு).

  • சில நார்கோலெப்ஸி நோயாளிகள் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் உடல் முழுவதும் செயலிழந்து உள்ளது போல் உணர்வர்.

  • நார்கோலெப்ஸி உள்ள சில நோயாளிகள் தூங்கும்போது அல்லது எழுந்தவுடன் விஷயங்களைப் பார்ப்பதாகஇ உணர்வதாக அல்லது கேட்பதாக அனுபவம் ஏற்படும்.

நார்கோலெப்சியின் சிக்கல்கள் என்ன?
  • நார்கோலெப்ஸி தினசரி வழக்கத்திற்கு கடுமையான இடையூறுகளை ஏற்படுத்தும்.
  • பகலில் எந்த நேரத்திலும் திடீர் தூக்கம் வரலாம். வாகனம் ஓட்டும்போது இந்த தாக்குதல்கள் சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும். சமையல் செய்யும் போது இவை ஏற்படுவது தீக்காயங்களுக்கு வழிவகுக்கலாம்.
  • நார்கோலெப்ஸி உள்ளவர்கள் அதிக எடையுடன் இருக்க வாய்ப்புள்ளது.
  • மனச்சோர்வுஇ ஆண்மையின்மை மற்றும் மலட்டுத்தன்மை போன்ற உளவியல்-பாலியல் தொந்தரவுகள் இந்த நோயாளிகளிடையே பொதுவானவை.
நார்கோலெப்ஸியை நீங்கள் எப்போது சந்தேகிக்க வேண்டும்?
  • நார்கோலெப்ஸி உள்ள ஒருவருக்கு பொதுவாக பகல்நேர தூக்கம் அதிகமாக இருக்கும். எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அவர்கள் திடீரென்று தூங்கலாம்.
  • திடீர் வீழ்ச்சி நிகழ்வுகள் அல்லது பலவீனம்இ பயம் அல்லது சிரிப்புடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
  • அவர்கள் தூங்கும்போது அல்லது விழித்திருக்கும்போது வண்ணமயமான கனவுகள் அல்லது மாயத்தோற்றங்களை அனுபவிக்கலாம்.
  • உறக்க முடக்கம் என்பது உறங்கும்போது அல்லது விழித்திருக்கும் போது உணர்வுப்பூர்வமாக நகரவோ அல்லது பேசவோ இயலாமை.
  • நாள் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் மனவொன்றிப்பு குறைவாக இருக்கும்.
நார்கோலெப்ஸி எவ்வாறு கண்டறியப்படுகிறது?
  • ஒரு விரிவான நரம்பியல் மதிப்பீட்டிற்குப் பிறகுஇ ஒரு நரம்பியல் இயற்பியல் நிபுணரால் தூக்க தாமதப் பரிசோதனையுடன் கூடிய விரிவான இரவு தூக்க ஆய்வுக்குப் பிறகு நார்கோலெப்ஸி கண்டறியப்படுகிறது.
நார்கோலெப்ஸிக்கு எப்படி சிகிச்சை அளிக்கலாம்?
  • நார்கோலெப்சியை பராமரிப்பதில் நல்ல தூக்க சுகாதாரத்தை (வழக்கமான விழிப்பு மற்றும் தூக்க சக்கரங்கள்) செயல்படுத்துதல் மற்றும் பராமரிப்பது அவசியம். மேலும்இ ஆரோக்கியமான உணவுஇ புகைபிடிப்பதை நிறுத்துதல்இ மது அருந்துவதைக் குறைத்தல் மற்றும் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது ஆகியவை பராமரிப்பில் ஒரு பங்கு வகிக்கின்றன.
  • மருந்தினால் ஏற்படும் தூக்கம் குறித்து உங்களுக்கு கவலைகள் இருந்தால்இ உங்கள் சிகிச்சை மருத்துவரிடம் விவாதிக்கவும்.
  • உங்களுடைய மருத்துவ நிலைமை மற்றும் நெகிழ்வான வேலை நேரம் போன்ற மாற்று விருப்பங்களைப் பற்றி உங்கள் முதலாளியுடன் விவாதிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • உங்கள் நோய் அறிகுறி கட்டுப்பாட்டில் உங்கள் மருத்துவர் திருப்தியடையும் வரை வாகனம் ஓட்டுதல் அல்லது சமைப்பது போன்ற அதிக ஆபத்துள்ள செயல்களைத் தவிர்க்கவும்.
  • மருந்துகள் – ஒரு முழுமையான மதிப்பீட்டிற்குப் பிறகுஇ சிகிச்சையளிக்கும் நரம்பியல் நிபுணரால் பொருத்தமான மருந்துகள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன.
நோய் முன்கணிப்பு
  • நார்கோலெப்ஸி என்பது வாழ்நாள் முழுவதும் நிலைக்கக் கூடிய தூங்கும் கோளாறு. உங்கள் வாழ்நாளில் அறிகுறிகள் தீவிரத்தில் வேறுபடலாம்இ ஆனால் அவை முற்றிலும் நீங்காது.
error: Content is protected !!