Sleep enuresis-ta ashansiam பங்குனி 17, 2022

ஸ்லீப் என்யூரிசிஸ் (தூக்கத்தில் படுக்கையை நனைத்தல்)

  • ஸ்லீப் என்யூரிசிஸ் (SE) என்பது 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளில் காணப்படும் 3 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் தூக்கத்தின் போது மீண்டும் மீண்டும் படுக்கையை நனைப்பது என்பதாகும்.
  • இது முதன்மை அல்லது இரண்டாம் நிலையாக இருக்கலாம்.
  • முதன்மை SE இல் 5 வயதிற்குப் பிறகு தூக்கத்தின் போது வாரத்திற்கு இரண்டு முறையாவது மீண்டும் மீண்டும் தன்னிச்சையாக படுக்கையை நனைத்தல் ஏற்படுகிறது. இந்த குழந்தைகள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தொடர்ச்சியாக உலர்ந்த தூக்கத்தை பேண முடிவதில்லை.
  • தொடர்ந்து 6 மாதங்களுக்கு உலர்ந்த உறக்கத்தை பேணிய குழந்தைக்கு மீண்டும் தன்னிச்சையாக படுக்கையை நனைத்தல் ஏற்படின்இ அது இரண்டாம் நிலை SE எனப்படும்.
  • மனநலப் பிரச்சனைகள் முதன்மை ளுநு க்கு ஒப்பீட்டளவில் அரிதான காரணமாகும்இ ஆனால் இது கவனக்குறைவு அதிவேகக் கோளாறு உள்ள குழந்தைகளிலும் ஒழுங்கற்ற குடும்பங்களில் வாழும் குழந்தைகளிலும் ஏற்படலாம்.
  • பெற்றோர் விவாகரத்துஇ உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகம் அல்லது புறக்கணிப்பு போன்ற குறிப்பிடத்தக்க உளவியல் மன அழுத்தத்துடன் இரண்டாம் நிலை ளுநு அதிகம் தொடர்புடையது. இரண்டாம் நிலை ளுநு உடைய குழந்தைகளில் நாள்பட்ட மலச்சிக்கல் மற்றும் என்கோபிரெசிஸ் (மல அழுக்கடைதல்) அடிக்கடி ஏற்படும்.
  • உங்கள் குழந்தைக்கு 5 வயதிற்குப் பிறகு இந்தப் பிரச்சனைகள் இருந்தால்இ தயவுசெய்து ஒரு நிபுணரைப் பார்க்கவும்.
error: Content is protected !!